ADDED : மே 16, 2024 06:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் ஏ.வி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, 2 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஆயிர வைசிய மகாஜன சங்கம் சார்பில்பாராட்டு விழா நடந்தது.
பத்தாம் வகுப்பு மாணவி பிரதிக்ஷா, 500க்கு 498 மதிப்பெண் பெற்றுமாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றதற்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஆயிர வைசிய மாகஜன சங்க செயலாளர் ஜெயக்குமார், தலைவர் ஜெயராமன், பொருளாளர் பிரசன்ன வெங்கடேஷ் சாதித்த மாணவர்களை வாழ்த்தி பேசினர். விழாவில் பள்ளிமுதல்வர் மதுசூதனன், துணை முதல்வர் சாந்தி, மேலாளர் பானுமதி, பெற்றோர்கள் பங்கேற்றனர்.----