ADDED : ஜூன் 24, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டி அருகே நம்புதாளை உயர்நிலைப்பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நடந்தது.
பள்ளி மேலாண்மைக் குழு தலைவி பாண்டிச்செல்வி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
