/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசமரம், வேப்பமரத்திற்கு ஆடிப்பெருக்கில் கல்யாணம்
/
அரசமரம், வேப்பமரத்திற்கு ஆடிப்பெருக்கில் கல்யாணம்
ADDED : ஆக 06, 2024 04:49 AM

கமுதி: கமுதி மீனாட்சி சுந்த ரேஸ்வரர் கோயில் முன்புள்ள ஆஞ்சநேயர், விநாயகர் கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அங்குள்ள அரசமரம், வேப்பமரத்திற்கு திருக்கல்யாணம் நடந்தது.
உலக நன்மைக்காகவும், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் திருக்கல்யாணம் நடந்தது.
பெண், மாப்பிள்ளை விட்டார்கள் சார்பில் மணமகன், மணமகளுக்கு தாம்பூல தட்டில் சீர்வரிசை, சீதனங்களை மங்கல இசை வாத்தியம் முழங்க முக்கிய விதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர்.
பின் விநாயகர், அரசமரம், வேப்ப மரத்திற்கு 18 வகை அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது.
இதில் அரசமரத்தை சிவனாகவும், வேப்பமரம் பார்வதி தேவியாகவும் பாவித்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை, வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது.
அன்னதானம் வழங்கப்பட்டது.
சுமங்கலிகளுக்கு வளையல்,மஞ்சள் கயிறு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
கமுதி அதனை சுற்றி யுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.