/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மதுபான பாரில் தகராறு; மூன்று பேர் கைது
/
மதுபான பாரில் தகராறு; மூன்று பேர் கைது
ADDED : செப் 04, 2024 12:57 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மதுபான பாரில் தகராறு செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் மதுபான பாரை வசந்த நகர் வடக்குத்தெரு கருப்பசாமி மகன் ராம்குமார் 38, நடத்தி வருகிறார். இந்த மதுபான பாருக்கு வந்த மூன்று பேர் பணம் தராமல் மது வாங்கி தரச்சொல்லி மதுபான பார் ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளனர்.
இதனை தட்டிக்கேட்ட பார் உரிமையாளர் ராம்குமார் பையில் வைத்திருந்த 2300 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர். ராம்குமார் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் பசும்பொன் நகர் ராமசந்திரன் மகன் விக்னேஷ்வரன் 24, எம்.எஸ்.கே.நகர் பூமி மகன் அரவிந்த் 26, தாமரை ஊருணி சுந்தர்ராஜ் மகன் முகேஷ்கண்ணன் 24, ஆகிய மூவரை கைது செய்தனர்.
இதில் விக்னேஷ்வரனை போலீசார் பிடிக்கச் சென்ற போது தவறி விழுந்த விக்னேஷ்வரன் கை முறிந்தது. இந்த மூன்று பேர் மீதும் ராமநாதபுரம், தேவிபட்டினம் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.