/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
செய்தியாளர் அலைபேசிகளை பறித்த போலீசாருடன் தகராறு
/
செய்தியாளர் அலைபேசிகளை பறித்த போலீசாருடன் தகராறு
ADDED : ஜூன் 04, 2024 11:54 PM
ராமநாதபுரம், : -ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் அலைபேசிகளை பறித்துக்கொண்டு பணி செய்ய விடாமல் போலீசார் தடுத்தனர்.
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை அண்ணா பல்கலை பொறியியல்கல்லுாரியில் நடந்தது. இதில் ஓட்டு எண்ணிக்கை பணியில் செய்தி சேகரிப்பதற்காக சென்ற தொலைகாட்சி, பத்திரிகை நிருபர்கள் தங்களது பேன்ட் பாக்கெட்டுக்குள் வைத்திருந்த அலைபேசிகளை பறித்து சென்று அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்தனர்.
பின் அலைபேசிக்கு அனுமதியில்லை என்றனர். யாரும் தவறாக பயன்படுத்தாத போது போலீசார் கெடுபிடி காட்டியதால் பலர் அவதிக்குள்ளாகினர். பின் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகள், சந்தீஷ் எஸ்.பி., தலையீடு செய்த பின் பல மணி நேரம் தாமதமாக அந்தந்த நிருபர்களுக்கு அலைபேசிகள் வழங்கப்பட்டன.