/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஏற்பாடுகள் திருப்தி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
/
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஏற்பாடுகள் திருப்தி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஏற்பாடுகள் திருப்தி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஏற்பாடுகள் திருப்தி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
ADDED : மே 15, 2024 06:44 AM

ராமநாதபுரம் : லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையங்களில் ஆய்வுசெய்த வரையில் அனைத்து மாவட்டங்களில் முன்னேற்பாடுகள் திருப்தியாக உள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்தார்.
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகுநேற்று ராமநாதபுரம் வந்தார். அவரை கலெக்டர் விஷ்ணுசந்திரன், எஸ்.பி., சந்தீஷ் வரவேற்றனர். லோக்சபா தேர்தல்ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அண்ணாபொறியியல் பல்கலை ஓட்டு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்தார்.
அப்போதுகண்காணிப்பு கேமரா செயல்பாடுகள், போலீஸ்பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். அதன் பிறகு கலெக்டர்அலுவலக கூட்டர அரங்கத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்,உதவி அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆய்வு கூட்டம்நடந்தது.
அப்போது தொகுதியில்வாக்காளர் எண்ணிக்கை, பதிவான ஓட்டு விபரங்கள் குறித்துகேட்டறிந்தார். ஓட்டுஎண்ணிக்கையின் போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து அறிவுரை வழங்கினார்.
அதன் பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:
ராமநாதபுரம் லோக்சபா தேர்தல் ஓட்டுஎண்ணிக்கை மையத்தில் அனைத்துஏற்பாடுகளும் நன்றாக செய்துள்ளனர். சில மாவட்டங்களில்வேவ்வேறு தொழில் நுட்ப காரணங்களால் சி.சி.டி.வி., கேமராசெயல்படவில்லை. அவற்றை கண்டறிந்துசரி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக ஓட்டு எண்ணிக்கை மையத்தில்வேட்பாளர்களின் முகவர்களும் உள்ளனர். இதுவரை ஆய்வு செய்தமாவட்டங்களில் ஓட்டு எண்ணிக்கை முன்னேற்பாடுகள்திருப்தியாக உள்ளது. தற்போது ஸ்ட்ராங் ரூமில் துணை ராணுவ வீரர்கள்,போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி எவ்வளவு மேஜைகள்உள்ளதோ அதனை பொருத்துசுற்றுகள் முடிவு செய்து, ஓட்டு எண்ணிக்கை விபரங்கள் தெரியப்படுத்தப்படும் என்றார்.

