/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசாள வந்த அம்மன் கோயில் விழா யாகசாலை பூஜையுடன் துவக்கம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ADDED : ஜூலை 23, 2024 05:03 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில் விழா நேற்று மாலை காப்பு கட்டுதல், யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில் 48ம் ஆண்டு பால்குடம் மற்றும் பூச்சொரிதல் விழா நேற்று மாலை 6:30 மணிக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முன்னதாக கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை, யாகசாலை பூஜைகள் நடந்தது.
பின் யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கிராம முக்கியஸ்தர்களால் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோயிலை வலம் வந்து மூலவர்கள் அரசாள வந்த அம்மன், துர்க்கை அம்மன் ஆகியோருக்கு ஊற்றப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும்தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். எட்டு நாட்கள் நடைபெறும் விழாவின் தொடர்ச்சியாக ஜூலை 26ல் விளக்கு பூஜை நடக்கிறது.
அதைத் தொடர்ந்து ஜூலை 30 காலை 10:30 மணிக்கு முக்கிய விழாவான பால்குட விழாவும், அன்று மாலை 6:00 மணிக்கு பூச்சொரிதல் விழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் ஹிந்து சமய மன்றத்தினர் செய்து வருகின்றனர்.