/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோடை துவங்கியதால் வறண்டு வரும் சக்கரக்கோட்டை கண்மாய்
/
கோடை துவங்கியதால் வறண்டு வரும் சக்கரக்கோட்டை கண்மாய்
கோடை துவங்கியதால் வறண்டு வரும் சக்கரக்கோட்டை கண்மாய்
கோடை துவங்கியதால் வறண்டு வரும் சக்கரக்கோட்டை கண்மாய்
ADDED : ஏப் 25, 2024 05:23 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் கோடை வெயில் காரணமாக சக்கரக்கோட்டை கண்மாயில் தேங்கிய தண்ணீர் வற்றி வறண்டுவருகிறது.
ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம் பெரிய கண்மாயக்கு அடுத்த பெரிய கண்மாய் சக்கரக்கோட்டை கண்மாய். 24 கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் தண்ணீரில் 30 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 2000 ஏக்கரில் பாசன வசதி பெறுகின்றனர்.
முறையான பராமரிப்பு செய்யாமல் கண்மாய் பகுதியில் நீர் தேங்குவது குறைந்து வருகிறது. பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பின் பறவைகள் கூடு கட்டிவாழும் வகையில் நாட்டு கருவேல மரங்கள் வளர்க்கப்படுகிறது. பாசன நீர் வெளியேறுவதற்கு 14 மடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கண்மாயின் உட்பகுதியில் நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இவ்வாண்டு மழையால் கண்மாயில் தேங்கிய நீர் கோடை வெப்பம் காரணமாகவேகமாக வற்றி வருகிறது. கோடை காலம் மே, ஜூன் மாதங்களில் முற்றிலும் நீரின்றி வறண்டு விடும் நிலை உள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதுடன், கால்நடைகளுக்கு குடிநீர்கிடைக்காமல் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

