ADDED : மே 30, 2024 10:23 PM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்- முதுகுளத்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. பின்பு காலபைரவருக்கு பால், சந்தனம், மஞ்சள், திரவிய பொடி உட்பட 16 வகை அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். முதுகுளத்துார் செல்லி அம்மன் கோயிலில் உள்ள பைரவருக்கு 16 வகை அபிஷேகம் தீபாராதனை நடந்தது.
