/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பசுந்தாள் உரம் பயன்படுத்துங்க: உதவி இயக்குனர் அறிவுரை
/
பசுந்தாள் உரம் பயன்படுத்துங்க: உதவி இயக்குனர் அறிவுரை
பசுந்தாள் உரம் பயன்படுத்துங்க: உதவி இயக்குனர் அறிவுரை
பசுந்தாள் உரம் பயன்படுத்துங்க: உதவி இயக்குனர் அறிவுரை
ADDED : ஆக 19, 2024 12:40 AM
திருவாடானை : பசுந்தாள் உரத்தை பயன்படுத்தி நெற்பயிர் விளைச்சலை அதிகரிக்கலாம் திருவாடானை வட்டார வேளாண் உதவி இயக்குநர் கீதாஞ்சலி தெரிவித்தார். அவர் கூறியிருப்பதாவது:
விவசாயத்தில் ஒரே பயிரை தொடர்ந்து சாகுபடி செய்வதாலும், மண்ணிலுள்ள சத்துக்கள் அதிகம் உறிஞ்சபடுவதாலும் மண்ணின் வளம் குறைந்து கொண்டே வருகிறது. இது தவிர உற்பத்தியை அதிகரிப்பதற்கு அதிகளவில் ரசாயன உரங்கள் களைக்கொல்லிகள் மற்றும் பூச்சி கொல்லிகள் பயன்படுத்துவதால் மண்ணில் உள்ள மண்புழுக்கள் மற்றும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து மண்வளம் குன்றியுள்ளது.
மேலும் மண்ணின் தன்மை மாறி களர், உவர் மற்றும் அமில நிலங்களாக மாறியுள்ளது. தொடர்ந்து இந்நிலை நீடித்தால் மலடான மண்ணைத்தான் அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்லும் நிலை ஏற்படும். ஆகவே பசுந்தாள் உரவிதைகள் (தக்கைப்பூண்டு) வேளாண்மை விரிவாக்க மையத்தில் வழங்கப்படுகிறது.
பசுந்தாள் உர விதைகளை பயன்படுத்துவதால் மண்ணின் உயிர் கரிம சத்தின் அளவை அதிகரிக்கலாம்.
இதன் மூலம் மண்ணின் வளம் மேம்படுவதுடன் பயிர் மகசூல் அதிகரிக்கப்படுகிறது. மேலும் களர், உவர் மற்றும் அமில மண்கள் சீர்திருத்தப்படுகிறது என்றார்.