/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் நாளை அழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்
/
பரமக்குடியில் நாளை அழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்
பரமக்குடியில் நாளை அழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்
பரமக்குடியில் நாளை அழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்
ADDED : ஏப் 21, 2024 04:09 AM

பரமக்குடி: -பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் நாளை இரவு அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது.
இதையடுத்து கோயில் உட்பட ஆறு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
மதுரை அழகர் கோயிலுக்கு அடுத்தபடியாக பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா கோலாகலமாக நடக்கிறது.
ஏப்.18ல் பெருமாளுக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.
தொடர்ந்து மூன்று நாட்களாக பெருமாள் யாகசாலை முன்பு ஏகாந்த சேவையில் அலங்காரமாகி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மேலும் விசேஷ தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு ஆடி வீதியில் வலம் வருகிறார்.
நாளை காலை யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பாடாகி பெருமாள் மற்றும் கருப்பணசாமிக்கு அபிஷேகம் நடக்கிறது.
தொடர்ந்து இரவு 12:00 மணிக்கு மேல் கள்ளழகர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி வைகையில் இறங்க உள்ளார்.
இதையடுத்து கோயில் மற்றும் வைகை ஆறு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. தொடர்ந்து சாமியாடிகள் நகர் முழுவதும் வலம் வந்து விழாவை சிறப்பித்து வருகின்றனர்.

