
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடியில் செப்.11ல் இமானுவேல் சேகரன் 67வது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளத்தையொட்டி ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு மேற்கொண்டார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் நேற்று டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
உடன் டி.ஐ.ஜி., அபிநவ் குமார், எஸ்.பி., சந்தீஷ், ஏ.டி.எஸ்.பி., காந்தி, பரமக்குடி டி.எஸ்.பி., சபரிநாதன், இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் இருந்தனர்.

