/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விளையாட்டு வீரர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
/
விளையாட்டு வீரர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 30, 2024 10:25 PM
ராமநாதபுரம், - நாட்டிற்கு பெருமை தேடித்தந்த சிறந்த விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள் டென்சிங் நார்கே தேசிய சாகச விருது பெற விண்ணப்பிக்கலாம். கலெக்டர் விஷ்ணுசந்திரன் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு ஆண்டுதோறும் நாட்டிற்கு பெருமை தேடித் தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்களுக்குபல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. 2024ம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தகுதியுள்ள வீரர்கள்https://awards.gov.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் மே 31(இன்று) சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு ஆணையம் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.