/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அமைச்சர் வருகைக்காக 3 மணி நேரம் வெயிலில் விளையாட்டு வீரர்கள் அவதி
/
அமைச்சர் வருகைக்காக 3 மணி நேரம் வெயிலில் விளையாட்டு வீரர்கள் அவதி
அமைச்சர் வருகைக்காக 3 மணி நேரம் வெயிலில் விளையாட்டு வீரர்கள் அவதி
அமைச்சர் வருகைக்காக 3 மணி நேரம் வெயிலில் விளையாட்டு வீரர்கள் அவதி
ADDED : செப் 10, 2024 11:59 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் முதல்வர் கோப்பை போட்டி துவக்க விழாவிற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் வருகைக்காக 3 மணி நேரம் வெயிலில் காத்திருந்து மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் அவதிப்பட்டனர்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேலுமாணிக்கம் ஹாக்கி மைதானத்தில் நேற்று முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி துவக்க விழா நடக்க இருந்தது. சிவகங்கையில் அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்த பிறகு ராமநாதபுரத்தில் துவங்க வேண்டும் என காலை 9:00 மணிக்கு முன் விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் ஹாக்கி மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
அமைச்சர் ராஜ கண்ணப்பன் வராத நிலையில் வெயிலில் மாணவர்கள் காத்திருந்தனர். அதன் பின் காலை 11:15 மணிக்கு வந்த போது வாத்திய இசை, சிலம்பக்குழுவினர் வரவேற்பு என நடத்தப்பட்டு பேசி முடித்து காலை 11:40 மணிக்கு தான் அமைச்சர் போட்டியை துவக்கி வைத்தார்.இதனால் 3 மணி நேரம் சுட்டெரிக்கும் வெயிலில் மைதானத்தில் விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் காத்திருந்து சோர்வடைந்தனர். நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்கிறீர்கள் என அமைச்சர் பேசும் போது குறிப்பிட்டு 'ஐஸ்' வைத்தார்.
இப்போதெல்லாம் அரசு விழாக்களில் வி.ஐ.பி.,க் கள் வருகைக்காக மாணவர்கள், பொதுமக்களை நீண்டநேரம் காத்திருக்க வைப்பது 'பேஷனாகி' விட்டது என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

