ADDED : மே 07, 2024 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி, : சாயல்குடி -அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள ஐ.ஓ.பி., வங்கி அருகே ஏ.டி.எம்., மிஷின் பல வாரங்களாக பழுதடைந்துள்ளது.
டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்காக வாடிக்கையாளர்கள் தங்களுடைய தொகையை பணம் செலுத்தக்கூடிய இயந்திரமும் செயல்பாடின்றி பல மாதங்களாக முடங்கி உள்ளது.
இந்நிலையில் ஒரு வாரத்திற்கு மேலாக அருகே உள்ள பணம் எடுக்க பயன்படும் ஏ.டி.எம்., இயந்திரம் பழுதடைந்துள்ளது. வாடிக்கையாளர்கள் கூறுகையில், சாயல்குடி ஐ.ஓ.பி., வங்கி கிளை அருகே உள்ள ஏ.டி.எம்., இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதால் பணம் செலுத்த கடலாடி மற்றும் பிற ஏ.டி.எம்., இயந்திரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
வாடிக்கையாளர்கள் அலைக்கழிப்பிற்கு உள்ளாகின்றனர். எனவே ஏ.டி.எம்., இயந்திரங்களை வங்கி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்றனர்.

