ADDED : ஆக 18, 2024 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார் : முதுகுளத்துார்--பரமக்குடி ரோடு மின்வாரிய அலுவலகம் எதிரில் உள்ள ஐயப்பன் கோயிலில் முதுவை சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் ஆவணி மாதம் முதல் தேதியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. குழுத் தலைவர் குருசாமி தலைமை வகித்தார். குருநாதர் திருமால் முன்னிலை வகித்தார்.
காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம் துவங்கி, சிறப்பு பூஜை நடந்தது. பின் படி பூஜை, பஜனை நடந்தது. முதுவை சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.