/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முத்துமாரியம்மன் கோயிலில் ஆவணி பொங்கல் உற்ஸவம்
/
முத்துமாரியம்மன் கோயிலில் ஆவணி பொங்கல் உற்ஸவம்
ADDED : செப் 04, 2024 01:03 AM

கீழக்கரை : கீழக்கரை தட்டான் தோப்பு தெரு முத்துமாரியம்மன் கோயிலில் 72ம் ஆண்டு ஆவணி உற்ஸவ விழா ஆக.27ல் காப்பு கட்டுதல் மற்றும் முத்துமாரியம்மனுக்கு தீபம் ஏற்றும் நிகழ்வுடன் துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்களும் அம்பிகையின் பல்வேறு அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார்.
நேற்று காலை 10:00 முதல் 12:00 மணிக்குள் மூலவர் முத்துமாரியம்மன், விநாயகர், பாலமுருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு ஏராளமான பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை நடந்தது.நேர்த்திக்கடன் பக்தர்கள் மாவிளக்கு எடுத்தனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் மற்றும் மேலக்கொடிக்கால் நாடார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.