/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பொருள் வாங்குபவர்களே விழித்திருங்கள்; நுகர்வோர் ஆணையத் தலைவர் அறிவுரை
/
பொருள் வாங்குபவர்களே விழித்திருங்கள்; நுகர்வோர் ஆணையத் தலைவர் அறிவுரை
பொருள் வாங்குபவர்களே விழித்திருங்கள்; நுகர்வோர் ஆணையத் தலைவர் அறிவுரை
பொருள் வாங்குபவர்களே விழித்திருங்கள்; நுகர்வோர் ஆணையத் தலைவர் அறிவுரை
ADDED : ஜூன் 27, 2024 11:35 PM

ராமநாதபுரம் : ஒரு பொருளை விற்பவர்களை காட்டிலும் அதனை வாங்கும் நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் நுகர்வோர் உரிமைகள் தின விழா நடந்தது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார். ராமாதபுரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தலைவர் பாலசுப்பிரமணியம் பங்கேற்று பேசியதாவது:
நுகர்வோர்கள் சட்டப்படி மூன்று அடுக்கு முறையில் நிவாரணம் பெறுவற்கு மாவட்ட, மாநில, தேசிய நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் உள்ளன. ஒரு ரூபாய்க்கு கூட வழக்கு தொடரலாம். அங்கும் திருப்தி இல்லை என்றால் உச்சநீதிமன்றத்தை நாடலாம்.
ஒரு பொருளை வாங்கும் போது அதன் தயாரிப்பு, காலாவதி தேதிகளை சரிபார்த்து, கண்டிப்பாக நிறுவன முத்திரையுடன கூடிய பில் உடனடியாக வாங்க வேண்டும். அப்போது தான் ஏதேனும் குறை என்றால் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நிவாரணம் பெற முடியும். எனவே விற்பவர்களை காட்டிலும் பொருளை வாங்குபவர்கள் விழித்திருக்க வேண்டும் என்றார்.
நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி, மருத்துவ, ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் பிரகலநாதன், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ஜினு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளர் மெர்லின் டாரதி, வட்டார போக்குவரத்து அலுவலர் ேஷக் முகமது, தாசில்தார் செந்தில்குமார், நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

