/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அவசர காலத்தில் உயிர்காக்கும் செயல்முறை குறித்து விழிப்புணர்வு
/
அவசர காலத்தில் உயிர்காக்கும் செயல்முறை குறித்து விழிப்புணர்வு
அவசர காலத்தில் உயிர்காக்கும் செயல்முறை குறித்து விழிப்புணர்வு
அவசர காலத்தில் உயிர்காக்கும் செயல்முறை குறித்து விழிப்புணர்வு
ADDED : ஆக 01, 2024 04:18 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ரோட்டரி கிளப், இன்னர் வீல் கிளப் சார்பில் அவசர காலத்தில் உயிர் காக்கும் செயல்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ராமநாதபுரம் அரசு செவிலியர் பள்ளியில் போலீசாருக்கு அளிக்கப்பட்டது.
கேணிக்கரை இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமை வகித்தார். டாக்டர் மதுரம் அரவிந்த்ராஜ், அரசு செவிலியர் பயிற்சிப்பள்ளி முதல்வர் ஜீவா முன்னிலை வகித்தார். அவசர காலத்தில் மாரடைப்பு, நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவதற்கான உயிர் காக்கும் செயல் முறை குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் ரோட்டரி கிளப் தலைவர் ஜெகதீஸ், செயலாளர் பாலமுருகன், இன்னர்வீல் கிளப் தலைவி கிரித்திகா, செயலாளர் அனுப்பிரியா உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். அவசர காலத்தில் உயிர் காக்கும் முறைகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை ரோட்டரி சங்கம் பார்த்திபன் செய்திருந்தார்.