/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பனை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு
/
பனை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு
ADDED : ஜூன் 01, 2024 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரத்தில் கிராமப்புற வேளாண் அனுபவத் திட்டத்தில் மதுரை வேளாண் கல்லுாரியில் இறுதி ஆண்டு இளங்கலை பயிலும் மாணவி ஆர். சுமதி பங்கேற்ற மகளிர் சுய உதவி குழு கலந்துரையாடல் நடந்தது.
கூட்டத்தில் பனை மரத்தின் பயன்கள் மற்றும் கிடைக்கக் கூடிய பதநீர், நுங்கு, கருப்பட்டி, பனங்கற்கண்டு உள்ளிட்டவையின் பயன்கள் பற்றியும், கோடை காலங்களில் நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.
பனை ஓலையை பயன்படுத்தி செய்யப்படும் கலைநய உற்பத்தி பொருட்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ரெகுநாதபுரத்தைச் சேர்ந்த ஏராளமான மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் கலந்து கொண்டனர்.