/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கல்லுாரிகளில் ஓட்டுப்பதிவு குறித்த விழிப்புணர்வு
/
கல்லுாரிகளில் ஓட்டுப்பதிவு குறித்த விழிப்புணர்வு
ADDED : ஏப் 03, 2024 06:58 AM
பரமக்குடி : பரமக்குடி அரசு கலைக்கல்லுாரி, முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லாரியில் லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி மாணவர்களின் கையெழுத்து இயக்கம் மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
ராமநாதபுரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி சட்டசபை தொகுதியில் 100 சதவீதம் ஓட்டளிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
பரமக்குடி அரசு கலைக் கல்லுாரியில் சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் மாணவர்கள் முன்னிலையில் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.
தொடர்ந்து தாசில்தார் சாந்தி, கல்லுாரி முதல்வர் மேகலா உள்ளிட்ட அனைத்து மாணவர்கள் பதாகையில் கையெழுத்திட்டனர். அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். இதேபோல் முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லுாரியிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தேர்தல் தனித் துணை தாசில்தார் முத்துராமலிங்கம், மண்டல துணை தாசில்தார்கள் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

