ADDED : மே 30, 2026 09:52 PM
அ நிறம் | அளவு
நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் கிளியூர் கிராமத்தில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் நடந்தது. ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்தல் மற்றும் எள் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
வேளாண் துணை இயக்குனர் மத்திய திட்டம் ராஜா, தரக் கட்டுப்பாடு உதவி இயக்குனர் நாகராஜன், நயினார்கோவில் வேளாண் உதவி இயக்குனர் பானுபிரகாஷ் பேசினர்.
