/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாயிகளுக்கு உயிர் உரங்களின் பயன்பற்றி விழிப்புணர்வு முகாம்
/
விவசாயிகளுக்கு உயிர் உரங்களின் பயன்பற்றி விழிப்புணர்வு முகாம்
விவசாயிகளுக்கு உயிர் உரங்களின் பயன்பற்றி விழிப்புணர்வு முகாம்
விவசாயிகளுக்கு உயிர் உரங்களின் பயன்பற்றி விழிப்புணர்வு முகாம்
ADDED : மே 29, 2024 05:09 AM
ராமநாதபுரம், : மதுரை வேளாண் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவிகள் நொச்சியூருணி கிராமத்தில் விவசாயிகளுக்கு உயிர் உரங்களின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவி ஜே. ஆனி ஹிங்கிஸ் கூறியதாவது:
வேளாண் குடிமக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய ரைசோபியம் என்ற நுண்ணுயிர் காற்றில் இருக்கும் தழைச்சத்தை சேகரித்துநிலத்தை வளப்படுத்தி பயிர்களுக்கு நன்மை அளிக்கிறது. இந்த ரைசோபியம் நுண்ணுயிர் பெரும்பாலும் பயறுவகைச் செடிகளுடைய வேர்முடிச்சுகளில் அதிகம் உள்ளது.
பயறு வகைகளை விதைக்கும் போது சோதனைக் கூடத்தில் பெருக்கப்பட்ட ரைசோபியத்தைக் கொண்டு விதை நேர்த்தி செய்து அதிக தழைச்சத்தை காற்றில் இருந்து கிரகித்து நிலத்தின் வளத்தை மேம்படுத்துவதுடன் நல்ல விளைச்சலையும் பெறலாம் என்றார். சிறு, குறு விவசாயிகள் பங்கேற்றனர்.