/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானையில் 'யாதுமானவள்' மாணவிகளுக்கு விழிப்புணர்வு
/
திருவாடானையில் 'யாதுமானவள்' மாணவிகளுக்கு விழிப்புணர்வு
திருவாடானையில் 'யாதுமானவள்' மாணவிகளுக்கு விழிப்புணர்வு
திருவாடானையில் 'யாதுமானவள்' மாணவிகளுக்கு விழிப்புணர்வு
ADDED : ஆக 05, 2024 07:05 AM
திருவாடானை : திருவாடானையில் தொண்டி மற்றும் விருதுநகர் ரோட்டரி கிளப் சார்பில் 'யாதுமானவள்' நிகழ்ச்சி நடந்தது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், வெற்றி என்பது எளிமையாக கிடைக்காது. பயிற்சியும் முயற்சியும் இருந்தால் தான் வெற்றி பெற முடியும். பதவி வரும் போது பணிந்து நடந்து கொள்ள வேண்டும்.
மாணவர்கள் அடுத்த தலைமுறைக்கு உதாரணமாகத் திகழ வேண்டும். வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஆண்கள் பெண்களின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்து வழி நடத்த வேண்டும் என்றார்.
திருவாடானை டி.எஸ்.பி., நிரேஷ், அரசு கலைக்கல்லுாரி முதல்வர் பழனியப்பன், ரோட்டரி சங்க முன்னாள் துணை கவர்னர் கார்த்திகேயன், செயலாளர் மகாலிங்கம், முன்னாள் தலைவர் சண்முகம், வெற்றிவேலன், மகாலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.