ADDED : ஆக 12, 2024 11:57 PM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கொழுந்துறை கிராமத்தில் தி கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. முதல்வர் முத்துக்குமார் தலைமை வகித்தார். ஊர்வலத்தை கீழத்துாவல் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் துவக்கி வைத்தார்.
போதைப் பொருள் விழிப்புணர்வு பதாகைகள் கையில் ஏந்தி கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். பின் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மாணவர்கள் புத்தகக் கல்வியில் மட்டும் ஆர்வம் செலுத்தாமல் சமூகப் பணியிலும் ஆர்வம் செலுத்த வேண்டும் என்று முதல்வர் முத்துக்குமார் பேசினார்.
உடன் நிர்வாக அலுவலர் ஹசன் உட்பட ஆசிரியர், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
