/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரையில் போதை வஸ்தை தடுக்க விழிப்புணர்வு தேவை: தடம் மாறும் இளைஞர்கள்

ADDED : ஏப் 26, 2024 12:44 AM
கீழக்கரை : -கீழக்கரையில் ஐஸ் எனப்படும் போதைப் பொருள்கள், கஞ்சா, சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களால் இளைஞர்கள் தடம் மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளி, கல்லுாரி மாணவர்களை குறி வைத்து விற்கப்படும் போதைப் பொருள்களால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க வேண்டிய போலீசார் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரை சாலைத் தெரு சமூக ஆர்வலர் பாசித் இலியாஸ் கூறியதாவது:
கீழக்கரையில் மிக அதிகபட்சமாக ஐஸ் என்ற போதைப் பொருளை வேகமாக புழக்கத்தில் விட்டு வருகின்றனர். இது அதிக போதை தரக்கூடியது. இதற்கு அடிமையானவர்கள் மீள்வது மிகவும் கடினம். இது குறித்து எஸ்.பி., சந்தீஷ்க்கு புகார் மனு அளித்துள்ளேன். விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதையில் சிக்கியுள்ள இளைஞர்களை மீட்பதற்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் அரசின் முயற்சியுடன் முன்வர வேண்டும். இதன் மூலம் வருங்கால சந்ததியினருக்கு பயனுள்ளதாக அமையும். போதைப்பொருள் குறித்த தொடர் விழிப்புணர்வு வேண்டும் என்றார்.