தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மகளிர்  குழுவிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 

மகளிர்  குழுவிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 

மகளிர்  குழுவிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 


ADDED : ஜூன் 23, 2026 11:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2026 11:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியமும் மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையமும் இணைந்து பரமக்குடி அருகே காமன் கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் சந்திப்பு முகாம் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடந்தது. பரமக்குடி சரகப் துணைப்பதிவாளர் ரத்தினவேல் தலைமை வகித்தார். மதுரை மேலாண்மை பயிற்சி நிலையம் பேராசிரியர் அழகு பாண்டியன் சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கை, அவர்களின் கடமைகள் சங்கம் மூலம் வழங்கும் கடன் விவரங்கள் கிட்டங்கி பயன்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். 

வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்துவது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் மகளிர் குழுவினர் உறுதிமொழி எடுத்தனர். துணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்  மதன் கண்ணன், கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குநர்  பாலாஜி,  கூட்டுறவு ஒன்றிய மேலாளர்  ராஜேஸ்வரி, சங்க செயலாளர் வாசு, மகளிர் குழுவினர் பங்கேற்றனர்.––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us