ADDED : ஜூன் 20, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் சிசுக் கொலை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. தலைமையாசிரியர் ஹாஜா முகைதீன் வரவேற்றார். அனைத்த மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி தலைமை வகித்தார்.
அவர் பேசுகையில், பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக போலீஸ் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அவசர உதவிக்கு 1098 என்ற உதவி எண்ணை அழைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். உதவி தலைமையாசிரியர் ஜாகீர் உசேன், ஆசிரியர் பாலமுருகன் பங்கேற்றனர். உடற்கல்வி இயக்குனர் தாமரைக் கண்ணன் ஏற்பாடு செய்தார். ––
