/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெண் கூட்டு பலாத்கார வழக்குஇருவர் ஜாமின் மனு தள்ளுபடி:
/
பெண் கூட்டு பலாத்கார வழக்குஇருவர் ஜாமின் மனு தள்ளுபடி:
பெண் கூட்டு பலாத்கார வழக்குஇருவர் ஜாமின் மனு தள்ளுபடி:
பெண் கூட்டு பலாத்கார வழக்குஇருவர் ஜாமின் மனு தள்ளுபடி:
ADDED : ஜன 31, 2025 01:53 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தவழக்கில் கைதான நால்வரில் இருவர் குண்டர் சட்டத்தில் சிறையில்அடைக்கப்பட்ட நிலையில் மற்ற இருவரது ஜாமின் மனுவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ராமநாதபுரத்தை சேர்ந்த 40 வயது பெண் புத்தேந்தல் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு டிச.29 இரவு ஆட்டோவில் சென்றுதிரும்பினார்.
அங்கு ரயில்வே கேட் பகுதியில் மது அருந்திய அதே பகுதியைசேர்ந்த புவனேஷ்குமார் 24, சரண்முருகன் 25, செல்வக்குமார் 24, முனீஸ் கண்ணா 23, ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் அப்பெண் புகார் செய்தார். இதையடுத்து நால்வரும் கைது செய்யப்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
சில நாட்களுக்கு முன் சரண்முருகன், புவனேஷ்குமார் ஆகியோர் குண்டாசில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் செல்வக்குமார், முனீஸ்கண்ணா ஆகியோர் ஜாமின் வழங்க கோரி ஜன.28 ல் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இவர்களுக்கு ஜாமின் வழங்கினால் அப்பெண்ணை மிரட்ட வாய்ப்பு உள்ளது என அரசு தரப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன் எதிர்ப்பு தெரிவித்தார். விசாரித்த முதன்மை நீதிபதி மெகபூப் அலிகான் , இருவரது ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.