தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சமச்சீர் உர பயன்பாடு விழிப்புணர்வு முகாம்

சமச்சீர் உர பயன்பாடு விழிப்புணர்வு முகாம்

சமச்சீர் உர பயன்பாடு விழிப்புணர்வு முகாம்


ADDED : மே 17, 2026 06:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2026 06:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பரமக்குடி:

பரமக்குடியில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்தல், சமச்சீர் உர பயன்பாடு குறித்த விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.

பரமக்குடி வேளாண் துணை இயக்குநர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ஐசக் மானுவேலு, வேளாண் உதவி இயக்குநர் மனோகரன் பேசினர்.

அப்போது, விவசாயிகள் பசுந்தாள் இயற்கை உரங்கள், மண்புழு ஊட்டமேற்றிய தொழு உரம் ஆகியவற்றை மண்வள அட்டை பரிந்துரைப்படி இட வேண்டும். பயிரின் மொத்த உர தேவையில் 50 சதம் மட்டும் ரசாயன உரங்கள் பயன்படுத்த வேண்டும்.

விதை நேர்த்தி செய்யும் முறைகள் மற்றும் நெற்பயிரினை தாக்கும் பூச்சி, நோய்கள் மற்றும் நீர் மேலாண்மை பற்றி விளக்கப்பட்டது. வேளாண் அலுவலர் சீதாலட்சுமி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சிவக்குமார், தங்கவேல், விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us