/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.12,505 கோடி வங்கி கடன் இலக்கு
/
ராமநாதபுரம் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.12,505 கோடி வங்கி கடன் இலக்கு
ராமநாதபுரம் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.12,505 கோடி வங்கி கடன் இலக்கு
ராமநாதபுரம் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.12,505 கோடி வங்கி கடன் இலக்கு
ADDED : பிப் 15, 2025 05:32 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தின் வளர்ச்சி சார்ந்த திட்டங்கள், துறைகளுக்கு 2025-26ம் நிதியாண்டில் வங்கிகள் மூலம் ரூ.12 ஆயிரத்து 505 கோடியே 54 லட்சம் வரை கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வங்கியாளர்களுக்கானமாவட்ட ஆலோசனைக் குழு கூட்டம் நடந்தது.
இதில் 2025--26ம்ஆண்டின் முன்னுரிமைத் துறைகளுக்கான வளம் சார்ந்த கடன்திட்ட அறிக்கையை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்வெளியிட்டார்.
நபார்டு வங்கி ஆண்டு தோறும் வளம் சார்ந்த கடன் திட்டத்தைதயாரித்து வெளியிட்டு வருகிறது.
அதன்படி முன்னுரிமைதுறைகளுக்கு 2025--26ம் ஆண்டில் ரூ.12 ஆயிரத்து 505 கோடியே 54 லட்சம் வங்கிக் கடன் அளவிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கிடைக்கப் பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் வரும் நிதியாண்டில் ரூ.12 ஆயிரத்து 505 கோடியே 54 லட்சம் வரை கடன் வழங்கமதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி மாவட்டத்தில் 2025--26 ஆம் ஆண்டில் வேளாண்மைக்கு ரூ.9418.31 கோடி, நுண், சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன் ரூ.1351.11 கோடி, பிற ஏற்றுமதி, கல்வி, வீடு கட்டுதல் மற்றும் மீள்சக்தி ஆகியவற்றிற்கு ரூ.1736.12 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் நபார்டு மாவட்ட மேலாளர் அருண் குமார், மாவட்டமுன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், வங்கி மேலாளர்கள் பங்கேற்றனர்.