/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
2700 போலீசார் பாதுகாப்பு: * ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் * வெளியூர் நபர்கள் வெளியேற உத்தரவு

UPDATED : ஏப் 18, 2024 06:41 AM
ADDED : ஏப் 18, 2024 05:14 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் 90 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானதாக கண்டறியப்பட்டுள்ளது. நாளை (ஏப்.,19) ஓட்டுப்பதிவை முன்னிட்டு 2700 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுகின்றனர். தேர்தல் பணிக்காக வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் உடன் வெளியேற வேண்டும் என எஸ்.பி., சந்தீஷ் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு நாளில் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
எஸ்.பி., சந்திஷ் தெரிவித்ததாவது: ஓட்டுப்பதிவு நாளான ஏப்., 19ல் மத்திய காவல் படையினர், தமிழ்நாடு காவல்துறை, ஊர்க்காவல் படை வீரர், என 2700 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். மாவட்டம் முழுவதும் 17 அதிவிரைவு படையினர், 16 விரைவு நடவடிக்கை குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். பதட்டமான 90 ஓட்டுச்சாவடி மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தேர்தல் நுண்பார்வையாளர்களுடன் கூடுதலாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
தேர்தல் பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்துள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்து தேர்தல் பணிக்கு வந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றிட வேண்டும். அனுமதியின்றி தங்குமிடங்கள், மண்டபங்கள், தங்கும் விடுதிகளில் தங்க கூடாது. ஏப்., 17,18,19 ஆகிய மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்பதால் சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்க போலீசார் ஈடுபட்டுள்ளனர். அமைதியான முறையில் தேர்தல் நடத்த அரசியல் கட்சியினர், மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
--
--------