/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாயிகள் தவிப்பு: கோடை மழையை நம்பி சாகுபடி செய்த நெற்பயிர் காய்ந்து கால்நடைக்கு தீனவமானது

ADDED : ஜூன் 03, 2024 02:47 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை மழையை நம்பி நெல் விதைத்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மழை தொடராததால் 20ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் காய்ந்து கால்நடைக்கு தீவனமானது. ரூ.பலஆயிரம் இழப்பால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் போதுமான அளவு கண்மாய்களில் தண்ணீர் இருந்தும், போதுமான அளவு கோடை மழை பெய்யாததால் வானம் பார்த்த பூமிகளில் விதைக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் காய்ந்து போனது. இதன் காரணமாக காய்ந்து போன பயிர்களை கால்நடைகளுக்கு மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: கோடை உழவு செய்து நிலங்களை தயார் செய்து நெல் விதைத்து, அதற்கான உரங்களையும் இட்டுள்ளனர். ஒரு சில இடங்களை தவிர்த்து பல இடங்களில் நெற்பயிர்களுக்கு போதுமான நீர் இல்லாததால் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, முற்றியும் காய்ந்து போனது. ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவிட்டு வீணாகியுள்ளது. குறிப்பாக கோடை நெற்பயிர்கள் பெரும்பாலும் மேலக்கிடாரம், கீழக்கிடாரம், சிக்கல், ஏர்வாடி போன்ற பகுதிகளில் உள்ள விதைக்கப்பட்ட நிலங்கள் காய்ந்து கருகி வருகின்றன என்றனர்.