/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழையால் கரைந்தது சாலை அந்தரத்தில் தடுப்பு கம்பிகள்
/
மழையால் கரைந்தது சாலை அந்தரத்தில் தடுப்பு கம்பிகள்
மழையால் கரைந்தது சாலை அந்தரத்தில் தடுப்பு கம்பிகள்
மழையால் கரைந்தது சாலை அந்தரத்தில் தடுப்பு கம்பிகள்
ADDED : ஏப் 28, 2024 05:53 AM

ராமநாதபுரம், : ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை பாலம் பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்ட தடுப்புகள் மழையில் கரைந்து அந்தரத்தில் தொங்குகிறது.
ராமநாதபுரத்தில் இருந்து துாத்துக்குடி, திருச்செந்துார் செல்ல கிழக்கு கடற்கரை சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் சாலை மேம்பாலம் ராமநாதபுரம், ராமேஸ்வரம் ரோடு சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சாலையோரங்களில் வாகனங்கள் விபத்துக்களில் சிக்கி பள்ளத்தில் உருண்டு விடாமல் இருக்க சாலையோர தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தடுப்பு கம்பிகள் பதிக்கப்பட்ட பகுதியில் மழையால் மண் கரைந்து போனது.
தற்போது சாலையோர தடுப்பு கம்பிகள் எந்த பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் நிற்கின்றன. தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும்.
விபத்துக்கள் நடந்தால் வாகனங்கள் பள்ளத்தில் உருண்டு விழும் நிலை ஏற்படும். இதில் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
உடனடியாக அந்தரத்தில் நிற்கும் சாலை தடுப்பு கம்பிகளை சீரமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் செய்ய வேண்டும்.--------

