/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பீகார் தொழிலாளர்
/
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பீகார் தொழிலாளர்
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பீகார் தொழிலாளர்
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பீகார் தொழிலாளர்
ADDED : பிப் 22, 2025 06:45 AM

கமுதி: கமுதி அருகே அபிராமத்தில் நடப்பு ஆண்டில் முதல் முறையாக விவசாயிகள் நலன் கருதி நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இங்கு அபிராமம் அதனை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தினந்தோறும் ஆன்லைனில் முன்பதிவு செய்து நெல் மூடைகளை விற்பனை செய்கின்றனர்.
குவிண்டால் எடை ஊக்கத்தொகையுடன் ரூ. 2450-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பணத்தை இரண்டு நாட்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைப்பதால் ஆர்வமுடன் ஏராளமான விவசாயிகள் தினந்தோறும் விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில் இங்கு வேலை ஆட்களின் பற்றாக்குறை, கடினமான பணி காரணமாக தொழிலாளிகள் வர மறுத்தனர். இதைடுத்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நெல் மூடைகள் இறக்கி வைப்பது, எடை அளவீடு செய்வது, அடுக்கி வைப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்கின்றனர்.
இவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1200 சம்பளமாக வழங்கப்படுகிறது.

