/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பண்ணைக்கரை நீர்நிலைகளில் இரைதேடி குவியும் பறவைகள்
/
பண்ணைக்கரை நீர்நிலைகளில் இரைதேடி குவியும் பறவைகள்
ADDED : ஜூன் 17, 2024 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபட்டினம் : பெரியபட்டினம் அருகே பண்ணைக்கரை பகுதியில் நீர்நிலைகள், வயல்வெளிகளில் இரைதேடி பறவைகள் வருவது அதிகரித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை மழையால் ஊருணி, கண்மாய்களில் ஓர் அளவிற்கு தண்ணீர் உள்ளன.
குறிப்பாக திருப்புல்லாணி, ரெகுநாதபுரம், பெரியப்பட்டினம், பண்ணைக்கரை உள்ளிட்ட இடங்களில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் உள்ளன. இதையடுத்து இரைதேடி நாரை, நீர்காகம் உள்ளிட்ட பறவைகள் வருவது அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கூறினர்.