/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தமிழகத்தில் மும்மொழி கல்விக்கு ஆதரவு திசை திருப்பவே அனைத்துக்கட்சி கூட்டம் தி.மு.க., மீது பா.ஜ., சாடல்
/
தமிழகத்தில் மும்மொழி கல்விக்கு ஆதரவு திசை திருப்பவே அனைத்துக்கட்சி கூட்டம் தி.மு.க., மீது பா.ஜ., சாடல்
தமிழகத்தில் மும்மொழி கல்விக்கு ஆதரவு திசை திருப்பவே அனைத்துக்கட்சி கூட்டம் தி.மு.க., மீது பா.ஜ., சாடல்
தமிழகத்தில் மும்மொழி கல்விக்கு ஆதரவு திசை திருப்பவே அனைத்துக்கட்சி கூட்டம் தி.மு.க., மீது பா.ஜ., சாடல்
ADDED : மார் 07, 2025 02:10 AM
மானாமதுரை:''தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு அனைத்து தரப்பு மக்கள், மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள ஆதரவை திசை திருப்பவே தி.மு.க., அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியது,'' என, சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி குற்றம்சாட்டினார்.
அவர் கூறியதாவது: பா.ஜ., சார்பில் மும்மொழி கொள்கையை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. மும்மொழி கொள்கையை தி.மு.க., எதிர்ப்பது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல. அரசியலுக்காக, சுயலாபத்திற்காக மட்டுமே தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் புதிய கல்விக்கொள்கையின் 454 பக்கங்கள் கொண்ட ஷரத்துக்களை முழுமையாக படித்து பார்த்துள்ளார்களா. அதில் தமிழக மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் தேவையான விஷயங்கள் உள்ளன. தேவையான கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக ஏராளமான கல்வியாளர்கள், அறிஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த தரம் வாய்ந்த கல்வி தமிழகத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கும், ஏழை மாணவர்களுக்கும் கிடைக்கக்கூடாது என தி.மு.க., அரசியல் செய்து வருகிறது. தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளிகளில் தமிழ் மொழியை தவிர மற்ற அனைத்து மொழிகளும் கற்றுத் தரப்படுகிறது.
தமிழகத்தில் தி.மு.க.,வினரை தவிர மற்ற அனைத்து தரப்பு பொதுமக்கள், ஏழை மாணவர்கள் மும்மொழி கொள்கையை வரவேற்கின்றனர். இதனை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக தி.மு.க., அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது.
இப்போது கூட்டுவதற்கு என்ன அவசியம். மக்களவை மறு சீரமைப்பு திட்டத்தில் தமிழகத்திற்கான தொகுதிகளை குறைக்க மாட்டோம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ள நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி மக்களை திசை திருப்பி வருகின்றனர். 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வினருக்கு தோற்றுவிடுவோம் என்ற பயமும், நடுக்கமும் ஏற்பட்டுள்ளது என்றார்.