ADDED : ஏப் 08, 2024 11:52 PM
ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பொன். கரு. ரஜினிகாந்த். இவர் அகமுடையார் மகாசபை நிறுவனராக உள்ளார். மேலும் பா.ஜ., மாநில கலை இலக்கிய அணி செயலாளராகவும், கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளராகவும், மாநில மையக்குழு உறுப்பினர் பதவியும் வகித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று பா.ஜ., கட்சியில் அனைத்து பதவிகளிலிருந்தம் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.அவர் கூறியதாவது:
ஒரு சமுதாயத்தின் தலைவராக இருந்து கொண்டு ஒரு குறிப்பிட்ட கட்சியை சார்ந்திருப்பது சரியில்லை. எனது சமூகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் இருப்பார்கள். தனிப்பட்ட கட்சியை சார்ந்து பயணிப்பது சரியாக இருக்காது என்பதால் ராஜினாமா செய்துள்ளேன். இனி வரும் காலங்களில் எந்த கட்சியிலும் சேரப்போவதில்லை, என்றார்.
மாவட்ட தலைவர்கள் ராமநாதபுரம் கதிர்வேல், புதுக்கோட்டை ராஜேந்திரன், விருதுநகர் காளிமுத்து, தென் மண்டல இளைஞரணி தலைவர் ஆனந்தபிரபு உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

