/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஓ.பி.எஸ்., அணியினர் சந்திக்காததால் சோர்வடையும் பா.ஜ., நிர்வாகிகள்
/
ஓ.பி.எஸ்., அணியினர் சந்திக்காததால் சோர்வடையும் பா.ஜ., நிர்வாகிகள்
ஓ.பி.எஸ்., அணியினர் சந்திக்காததால் சோர்வடையும் பா.ஜ., நிர்வாகிகள்
ஓ.பி.எஸ்., அணியினர் சந்திக்காததால் சோர்வடையும் பா.ஜ., நிர்வாகிகள்
ADDED : மார் 28, 2024 10:57 PM
கடலாடி : லோக்சபா தேர்தலை முன்னிட்டு பா.ஜ., சார்பில் சுயேச்சையாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.
கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஓ.பி.எஸ்., அணியினர் வந்து சம்பந்தப்பட்ட பா.ஜ., நிர்வாகிகளை சந்திக்காதது உள்ளூர் தொண்டர்களை சோர்வடையச் செய்துள்ளது.
கடந்த ஆண்டு பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து பாதயாத்திரையை துவக்கிய போது கட்சியின் அனைத்து கட்டமைப்பு நடவடிக்கைகளையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார். அதனடிப்படையில் ஒன்றிய தலைவர்கள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் அனைத்து லோக்சபா தேர்தலுக்கான அனைத்து தரவுகளும் உள்ளது.
இந்நிலையில் பா.ஜ., ஆதரவுடன் சுயேச்சையாக களமிறங்கியுள்ள ஓ.பி.எஸ்., அணியினர் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை சந்திக்காமல் இருப்பது தற்போது கொளுத்தும் வெயிலில் கட்சியினரை மேலும் சோர்வடையச் செய்துள்ளது.
எனவே தேர்தலுக்கு குறுகிய காலம் உள்ள நிலையிலும் சின்னங்கள் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் வேளையில் அனைத்து தரப்பு கூட்டணிக் கட்சிகளையும் சந்தித்து புரிந்துணர்வுடன் பிரசாரம் மேற்கொண்டால் வெற்றிக்கு வழிவகுக்கும் என தெரிவித்தனர்.

