/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கொட்டும் மழையில் பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்
/
கொட்டும் மழையில் பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 18, 2024 03:59 AM

ராமநாதபுரம் : -கோல்கட்டா பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ராமநாதபுரத்தில் பா.ஜ., மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் அரண்மனைப் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகளிரணி மாவட்ட தலைவி லட்சுமிதேவி தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் தரணி முருகேசன், மாவட்ட பார்வையாளர் முரளிதரன் முன்னிலை வகித்தனர்.
பொருளாதார பிரிவு மாநில செயலாளர் சண்முகநாதன், ஊடக பிரிவு செயலாளர் குமரன், மாவட்ட துணைத்தலைவர் முத்துச்சாமி, நகர் தலைவர் கார்த்திகேயன், ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர் குமார்,ராமநாதபுரம் ஒன்றிய தலைவர் சண்முகநாதன், போகலுார் ஒன்றிய தலைவர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கோல்கட்டா சம்பவத்தில் ஆர்.ஜி-கார் மருத்துவக்கல்லுாரியில் முதுநிலை படிப்பு படிந்து வந்த பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

