/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மும்மொழி கொள்கைக்கு ஆதரவு பா.ஜ., கையெழுத்து இயக்கம்
/
மும்மொழி கொள்கைக்கு ஆதரவு பா.ஜ., கையெழுத்து இயக்கம்
மும்மொழி கொள்கைக்கு ஆதரவு பா.ஜ., கையெழுத்து இயக்கம்
மும்மொழி கொள்கைக்கு ஆதரவு பா.ஜ., கையெழுத்து இயக்கம்
ADDED : மார் 08, 2025 04:03 AM

திருவாடானை : மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 லட்சம் கையெழுத்து வாங்க முடிவு செய்துள்ளதாக பா.ஜ. மாவட்ட தலைவர் முரளிதரன் கூறினார்.
திருவாடானையில் பா.ஜ. சார்பில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக சமக்கல்வி எங்கள் உரிமை என்ற கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடந்தது.
இதில் கலந்து கொண்ட பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன் கூறியதாவது:
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துகள் வாங்கப்பட்டுள்ளது. மொத்தம் 2 லட்சம் கையெழுத்து வாங்கி அந்த படிவங்களை திருச்சியில் ஜன.,23ல் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.