/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மும்மொழி கல்வி கொள்கை பா.ஜ., கையெழுத்து இயக்கம்
/
மும்மொழி கல்வி கொள்கை பா.ஜ., கையெழுத்து இயக்கம்
ADDED : மார் 07, 2025 08:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: மாவட்ட பா.ஜ., சார்பில் மத்திய அரசின் மும்மொழி கல்விக் கொள்கைக்கு ஆதரவாக ராமநாதபுரத்தில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
ராமநாதபுரம் அச்சுந்தன்வயலில் உள்ள பா.ஜ., மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாநிலப்பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி மும்மொழி கல்விக்கொள்கைக்கு ஆதராவாக கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மாவட்டத்தலைவர் முரளிதரன் முன்னிலை வகித்தார்.
பா.ஜ., ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர் குமார் உட்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கையெழுத்திட்டனர். அரண்மனை அருகே கடைக்காரர்கள், பொதுமக்களிடம் மும்மொழி கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து வாங்கினர்.