நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனை, தொண்டி தவ்ஹீத் ஜமாத் சார்பில் தொண்டியில் ரத்த தான முகாம் நடந்தது. தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு துவக்கி வைத்தார். தவ்ஹீத் ஜமாத் வடக்கு மாவட்டச் செயலாளர் அல்பார் அமீன் முன்னிலை வகித்தார்.
தொண்டி தவ்ஹீத் ஜமாத் வெள்ளை மணல் கிளை தெரு தலைவர் சேகு அபுபக்கர், செயலாளர் நியாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு இம்முகாம் நடந்தது. 50க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.