/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு ஐ.டி.ஐ.,ல் ரத்த தான முகாம்
/
அரசு ஐ.டி.ஐ.,ல் ரத்த தான முகாம்
ADDED : ஜூலை 25, 2024 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : பரமக்குடி அரசு ஐ.டி.ஐ., வளாகத்தில் தன்னார்வ ரத்ததான முகாம் நடந்தது.
பரமக்குடி அரசு ஐ.டி.ஐ.,ல் பார்த்திபனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுகந்தி ரத்ததான முகாம் நடத்த கேட்டுக்கொண்டார். இதன்படி நடந்த முகாமில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பிரதீபா தலைமையில் மருத்துவக் குழுவினர் ரத்ததான முகாம் நடத்தினர்.
இதில் ரத்தம் வழங்கிய அனைத்து மாணவர்களுக்கும் உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
முகாமில் அரசு தொழிற்பயிற்சி நிலைய அலுவலர்கள் ஹரிகுமார், சண்முகசுந்தரம், சாமிநாதன், முனீஸ்வரன், தமிழ்ச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.

