/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் பி.எம்.எஸ்., ஆர்ப்பாட்டம்
/
பரமக்குடியில் பி.எம்.எஸ்., ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 04, 2025 10:14 PM

பரமக்குடி : பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் நேருஜி மைதானத்தில் நெசவாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பாரதிய மஸ்துார் சங்கம் (பி.எம்.எஸ்.,) சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பி.எம்.எஸ்., மாவட்ட தலைவர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ரெங்காச்சாரி, நாகநாதன், சேகர் முன்னிலை வகித்தனர்.
தேசிய செயற்குழு உறுப்பினர் காசிவிஸ்வநாதன், பொது தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மோகன்ராம், தமிழக பாரதிய கைத்தறி பேரவை பொதுச் செயலாளர் பாபுலால், பி.எம்.எஸ்., மாநில பொதுச் செயலாளர் சங்கர் பேசினர்.
தமிழகத்தில் தேங்கியுள்ள ரூ.150 கோடி மதிப்புள்ள சேலைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
கைத்தறியை விசைத்தறியில் நெய்பவர்கள் மீது கைத்தறி அமலாக்கத்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை கூலியில் 30 சதம் உயர்த்தி வழங்க வேண்டும்.
அனைத்து நெசவாளர்களுக்கும் காப்பீடு உறுதி செய்ய வேண்டும். நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் தறிக்கூலியை ரொக்கமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தினர்.
மாவட்டத் துணைத் தலைவர் ராம்தாஸ் நன்றி கூறினார்.