/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலில் சுற்றுலாப் பயணிகளை அழைத்து சென்றால் படகு பறிமுதல்
/
கடலில் சுற்றுலாப் பயணிகளை அழைத்து சென்றால் படகு பறிமுதல்
கடலில் சுற்றுலாப் பயணிகளை அழைத்து சென்றால் படகு பறிமுதல்
கடலில் சுற்றுலாப் பயணிகளை அழைத்து சென்றால் படகு பறிமுதல்
ADDED : ஆக 09, 2024 10:42 PM
தொண்டி: கடலில் மீனவர்கள் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்றால் படகு பறிமுதல் செய்யப்படும் என மரைன் போலீசார் எச்சரித்தனர்.
தொண்டி மரைன் போலீசார் கூறியதாவது:
தொண்டிக்கும் வரும் சுற்றுலாப் பயணிகளை சில மீனவர்கள் படகில் கடலுக்குள் அழைத்துச் செல்கின்றனர். நேற்று முன்தினம் ரோந்து சென்ற போது புதுக்குடி மீனவர்கள் இச்செயலில் ஈடுபட்டனர்.
படகில் பயணிகள் செல்லும்போது தண்ணீரை பார்த்த ஆர்வத்தில் பயணிகள் எழ முயற்சிக்கும் போது படகு ஆட்டம் காண்பதுடன் தடுமாறி கவிழ்ந்து விடுகிறது. இதுவே பெரும்பாலன விபத்திற்கு காரணமாக அமைகிறது.
எனவே மீனவர்கள் சுற்றுலாப் பயணிகளை கடலுக்குள் அழைத்து செல்லக் கூடாது. மீறினால் படகு பறிமுதல் செய்யப்படும். அதே போல் சில கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் இரவில் கடலுக்கு சென்று லைட் வெளிச்சத்தில் மீன் பிடிக்கின்றனர். ஜெனரேட்டர் வசதியுடன் ஆழ் கடலுக்கு செல்லும் மீனவர்கள் கம்பங்களில் அதிக வெளிச்சமுள்ள பல்புகளை கட்டி வெளிச்சத்தை காட்டுகின்றனர்.
இந்த வெளிச்சத்திற்கு மீன்கள் கும்பலாக குவியும் போது வலையை விரித்து மொத்தமாக அள்ளிக் கொண்டு கரைக்கு வருகின்றனர். லைட் வெளிச்சத்தில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே தடையை மீறி லைட் வெளிச்சத்தில் மீன் பிடித்தால் படகை பறிமுதல் செய்வதோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

