/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் ரயில் பாலத்தை கடந்து சென்ற படகுகள்
/
பாம்பன் ரயில் பாலத்தை கடந்து சென்ற படகுகள்
ADDED : ஏப் 16, 2024 04:04 AM

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் துாக்கு பாலம் திறக்கப்பட்டதும் மீன்பிடி படகுகள் கடந்து சென்றன.
பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி நடந்து வரும் நிலையில் தற்போது புதிய துாக்கு பாலத்தை நடுவில் பொருத்த நகர்த்தும் பணி நடக்கிறது. இதனால் ஏப்.,5 முதல் பழைய ரயில் பாலத்தை திறப்பதில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் துாத்துக்குடி தருவைகுளம் பகுதியை சேர்ந்த 40 ஆழ்கடல் மீன்பிடி படகுகளின் மீனவர்கள் நாகையில் தங்கியிருந்து அந்தமான் கடலில் மீன் பிடித்து வந்தனர். நேற்று முதல் மீன்பிடிக்க தடைக் காலம் துவங்கியதால் படகுகளை தருவைகுளம் கொண்டு செல்ல நேற்று முன்தினம் பாம்பன் கடற்கரைக்கு படகுடன் மீனவர்கள் வந்தனர்.
பின் ரயில் பாலத்தை திறக்க ரயில்வே நிர்வாகம், பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி நேற்று மாலை ரயில் துாக்கு பாலம் திறந்ததும் 40 படகுகள் அடுத்தடுத்து கடந்து தருவைகுளம் நோக்கி சென்றன.
---

