/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பேரலைகளின் தாக்கத்தால் மணல் திட்டில் படகுகள் நிறுத்தம்: பயணிகள் ஏமாற்றம்
/
பேரலைகளின் தாக்கத்தால் மணல் திட்டில் படகுகள் நிறுத்தம்: பயணிகள் ஏமாற்றம்
பேரலைகளின் தாக்கத்தால் மணல் திட்டில் படகுகள் நிறுத்தம்: பயணிகள் ஏமாற்றம்
பேரலைகளின் தாக்கத்தால் மணல் திட்டில் படகுகள் நிறுத்தம்: பயணிகள் ஏமாற்றம்
ADDED : ஏப் 18, 2024 05:25 AM

கீழக்கரை: ஏர்வாடி அருகே பிச்சை மூப்பன்வலசையில் மன்னார் வளைகுடா கடலில் சூழலியல் சுற்றுலா தளம் அமைந்துள்ளது. இங்கு தென்மேற்கு பருவகாற்றால் அலைகளின் சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து நிறுத்தப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஏர்வாடி அருகே பிச்சை மூப்பன்வலசையில் மன்னார் வளைகுடா கடலில் சூழலியல் சுற்றுலா தளம் அமைந்துள்ளது. இங்கு
கடலில் அரிய வகை டேபிள் வடிவம், மனித மூளை, மான்கொம்பு, ரோஜா இதழ் உள்ளிட்ட பல்வேறு வகையான வடிவங்களில் பவளப்பாறைகள், கடல் புற்கள், வண்ண மீன்கள் ரசித்துச் செல்வதற்கு ஏற்ற வகையில் படகின் நடுவே கண்ணாடியிழையிலான படகு போக்குவரத்து உள்ளது.
தற்பொழுது கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பள்ளி மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகின்றனர்.
இந்நிலையில் ஏப்.,15 முதல் மே, ஜூன், ஜூலை, ஆக., வரை தென்மேற்கு பருவக்காற்றில் தாக்கத்தால் கடலில் பேரலைகளின் தாக்கம் அதிகமாக உள்ளது.
பேரலைகளையும் தாக்கத்தால் நீர் கலங்கலான நிலை உள்ளது. பவளப்பாறைகள் உள்ளிட்டவைகள் தெளிவாக கண்களுக்கு புலப்படாது.
இதனால் காற்றின் வேகம் குறைந்த நேரத்தில் மட்டும் கடலில் படகு சவாரி இயக்கப்படுகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், நான்கு மாதங்களுக்குப் பிறகு செப்., வடகிழக்கு பருவக்காற்று வீசும் போது அலைகளின் தாக்கம் சீராக இருக்கும். கடலில் உள்ள அரிய வகை பவளப்பாறைகளின் காட்சிகள் மிக தெளிவாக தெரியும் என்றனர்.

