/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் புத்தகத் திருவிழா துவக்கம்; 10 நாளில் ரூ.ஒரு கோடி விற்பனை இலக்கு
/
பரமக்குடியில் புத்தகத் திருவிழா துவக்கம்; 10 நாளில் ரூ.ஒரு கோடி விற்பனை இலக்கு
பரமக்குடியில் புத்தகத் திருவிழா துவக்கம்; 10 நாளில் ரூ.ஒரு கோடி விற்பனை இலக்கு
பரமக்குடியில் புத்தகத் திருவிழா துவக்கம்; 10 நாளில் ரூ.ஒரு கோடி விற்பனை இலக்கு
ADDED : ஆக 09, 2024 10:45 PM

பரமக்குடி: பரமக்குடி சந்தை கடை டி.டி.எஸ்.மஹாலில் மக்கள் நுாலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 2ம் ஆண்டு நம்ம ஊரு புத்தகத் திருவிழா துவக்க விழா நடந்தது.
மக்கள் நுாலகம் தலைவர் சந்தியாகு தலைமை வகித்தார். வரவேற்பு குழு செயலாளர் பசுமலை, பொருளாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் ராஜா வரவேற்றார். புத்தகக் கண்காட்சியை பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
எம்.எல்.ஏ., முருகேசன்,நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, தாசில்தார் சாந்தி, பி.டி.ஓ., கருப்பையா, டி.எஸ்.பி., சபரிநாதன், இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, எஸ்.ஐ., சுப்புலட்சுமி, கவுன்சிலர் வடமலையான் பேசினர்.
புத்தகத் திருவிழா ஆக.18 வரை 10 நாட்கள் நடக்கிறது. இங்கு 25 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு பல முன்னணி புத்தக நிலையங்களில் விற்கப்படும் புத்தகங்களுக்கு 10 சதவீதம் முதல் விலையில்தள்ளுபடி வழங்குகின்றனர்.
கடந்த ஆண்டு ரூ.40 லட்சம் மதிப்பில் புத்தகங்கள் விற்பனையான நிலையில் இந்த ஆண்டு ரூ.1 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்மிகம்,அரசியல், கதை, ஆங்கிலம் என அனைத்து புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளது.
தினமும் மாலை கருத்தரங்கம் நடக்கிறது. மேலும் 2வது ஆண்டு நடக்கும் புத்தகத் திருவிழா தனியார்அமைப்பின் மூலம் நடத்தப்படும் நிலையில் வரும் காலங்களில் அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். துணைச் செயலாளர் அப்துல் காதர் நன்றி கூறினார்.

