/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உவர் நீர் மீன் வளர்ப்பு முறை விழா
/
உவர் நீர் மீன் வளர்ப்பு முறை விழா
ADDED : ஜூலை 10, 2024 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : தொண்டி அருகே காரங்காட்டில் மத்திய உவர் நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் சார்பில் ஒருங்கிணைந்த பன்னடுக்கு உவர் நீர் மீன்வளர்ப்பு முறை திட்டத்தின் நிறைவு விழா நடந்தது.
இதில் 60 பேர் கலந்து கொண்டனர். இத்திட்டத்தில் வளர்க்கப்பட்ட கொடுவா, கடற்பாசி, மட்டி மற்றும் ஆழி ஆகிய மீன்கள் மகசூலை பெற்று பயனைடைந்தனர்.
முதன்மை விஞ்ஞானி தெபோராள் தலைமை வகித்தார். திட்ட இணை அலுவலர் ஜெயபவித்திரன், களப்பணியாளர் தேவநாதன் நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து நடத்தினர். மீன்வளத்துறை உதவி இயக்குநர் கோபிநாத், காரங்காடு ஊராட்சி தலைவர் கார்கோல்மேரி மற்றும் பலர் பங்கேற்றனர்.